இந்திய இராணுவத்தின் வரவு தொடர்பில் கோட்டாபயவின் இறுதி முடிவு (VIDEO)
இந்திய இராணுவம் இலங்கைக்கு அழைக்கப்பட்டால் அதன் விளைவுகள் சிங்கள தேசத்தில் மிக பாரதூரமாக இருக்கும்.எனவே கோட்டாபய அரசாங்கமும்,மகா சங்கத்தினரும் இந்திய இராணுவத்தை ஒருபோதும் இலங்கைக்கு அழைக்கமாட்டார்கள் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய படை இலங்கைக்குள் பிரவேசித்தால் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் உயர் குலாம் மீண்டும் கீழிறங்கி பிரேமதாச போன்ற அடித்தட்டு வர்க்கத்தை போன்றவர்கள் அரசியல் தலைவர் பதவியில் அமர வாய்ப்பாக அமையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஜனாதிபதி பதவியில் அமருவதை ஒருபோதும் மகா சங்கத்தினர் விரும்பமாட்டார்கள். இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இந்திய இராணுவத்தை அழைக்கமாட்டார்.
இலங்கையை பொருத்தவரை இந்திய இராணுவத்தை களமிறக்கும் வகையில் ஒரு போர் இங்கு இடம்பெறவில்லை.இலங்கையில் பயிற்றப்பட்ட தொடர் இராணுவ இயந்திரம் தற்போதும் செயல் வடிவிலேயே உள்ளது. ஆகவே இலங்கை இராணுவத்தால் நிலைமையை கையாள முடியும்.இதற்கு தலைமைகள் சரியான முறையில் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri