நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த ஒரே தலைவர் கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஜனாதிபதி ராஜினாமா செய்யும் அறிவிப்பை வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்த்தனரே அன்றி, மீதமுள்ள பதவி காலத்தில் இருப்பதை பற்றி கேட்பதற்காக அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் ஜனாதிபதியாக முன்நோக்கி செல்ல முடியாது என்று கூறியிருந்தால், இதனை விட கௌரவம் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்தது.
எவ்வாறாயினும் நிலவும் நெருக்கடிகள் பற்றி பேசி ஜனாதிபதி, அவற்றை உருவாக்கியது தான் அல்ல என கூறினாலும் அவற்றை உருவாக்கியது தனது சகோதரர் உட்பட அரசாங்கம் என்பதை மறக்கக் கூடாது.
நாட்டின் அழிக்வுக்கு வழிவகுத்த ஒரே தலைவர் என்ற நிலையை கோட்டபாய ராஜபக்ச அடைந்து விட்டார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவுகள், தீர்மானங்கள் காரணமாகவே நாடு நெருக்கடிக்குள் சென்றது.
தற்போது அந்த நெருக்கடிக்கான காரணத்தை மக்கள் மீது சுமத்த முயற்சித்தால், கோட்டாபய ராஜபக்ச அரசியல் அனுபவம் பற்றி தனியான விசாரணையை நடத்த நேரிடும் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam