அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா கோட்டாபய? வெளியான அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை போட்டியிடச் செய்வதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் மூன்றரை வருடங்களில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை வைத்து இப்போது எதிர்வுகூறல்களை வெளியிடுவது பொருத்தமாக அமையாது. நிச்சயமாக எமது வேட்பாளர் தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷதான்.
இப்போதே அதனை அறிவிப்பதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. வேறு வேட்பாளர் குறித்து இப்போது அறிவிக்க அவசியமுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam