அடையாளம் காணும் இடங்களை முடக்குங்கள்: கோட்டாபய உத்தரவு
நாட்டில் கோவிட் மரணங்களை தொடர்ந்தும் குறைப்பதற்கு எடுக்க கூடிய நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேற்று கோவிட் தடுப்பு விசேட செயலணியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்கள் இன்னமும் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களை தனிமைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri