கோட்டாபயவின் செயற்பாடு! ஏற்க மறுக்கும் நாமல் - செய்திகளின் தொகுப்பு
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சி அமைந்ததாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் உறவினரின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வீழ்ச்சியடையவில்லை. எங்கள் சரிவு வடிவமைக்கப்பட்டது. அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த அனைத்து தீர்மானங்களையும் நான் அங்கீகரிக்கவில்லை. என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு