சீன புத்தாண்டான புலி வருடத்திற்கு ஜனாதிபதி வாழ்த்து! (Photos)
சீன புத்தாண்டான புலி வருடத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீன மக்கள் இன்றைய தினம் தங்களது புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு சீன புத்தாண்டு புலி வருடம் என பெயரிடப்பட்டுள்ளது.
மலர்ந்திருக்கும் இந்த புத்தாண்டு பேரின்மானதும் சுபீட்சமானதுமான அமைய வேண்டுமென இலங்கை மக்களும் அரசாங்கமும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மற்றும் இரு தரப்பு நட்பு மேலும் இந்த ஆண்டில் வலுப்பெற வேண்டுமென ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Warm greetings from the #lka People & the #GoSL to the People & the Government of #China for a blissful & prosperous #ChineseNewYear , the Year of the Tiger. May this year further strengthen our friendship & bilateral relationship.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) February 1, 2022
?? ??



