இலங்கையின் தற்போதைய நிலைக்கு ஜனாதிபதியின் மூட நம்பிக்கையே காரணம் : பாலித ரங்கே பண்டார - செய்திகளின் தொகுப்பு (VIDEO)
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் மூட நம்பிக்கையே காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி அனுராதபுரத்தில் ஞானக்காவின் உதவியை நாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பொருளாதார நிபுணர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் உதவியைப் பெறுவதற்குப் பதிலாக, ஜனாதிபதி ஞானக்காவின் உதவியை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,