ஆளும் கட்சி கூட்டத்தில் அமைச்சர் கம்மன்பில மீது கடும் விமர்சனம்
ஆளும் கட்சி கூட்டத்தில் அமைச்சர் உதய கம்மன்பில மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் இவ்வாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கோவிட் மட்டும் காரணமில்லை என அமைச்சா உதய கம்மன்பில கூறிய கருத்துக்கு, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, ஜகத் குமார, திஸ்ஸ குட்டியாரச்சி உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் பலரும் உதய கம்மன்பிலவின் செயற்பாடுகளை விமர்சனம் செய்துள்ளனர்.
நாடு தொடர்ச்சியாக கடன் பெற்றுக்கொண்டதனால் இவ்வாறு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பதனை வெளிப்படுத்த தாம் முயற்சித்ததாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும் அமைச்சரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சில ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam