அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனின் வீடு முற்றுகை (Video)
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மனோஜ் ராஜபக்சவின் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டுக்கு எதிரில் இலங்கையர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸ் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி கட்டாயம் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்து இவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வீடுகளை கொள்வனவு செய்ய எப்படி பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கையர்கள் என்ற வகையில் அந்த பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே சுவீடன் நாடாளுமன்றத்திற்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கையர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதல்வர் மனோஜ் ராஜபக்ச, அமெரிக்காவில் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக பதவி விலகுமாறு அறிவிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி மாளிகையும் போராட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்டது. இவ்வாறான நிலைமையில், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் புதல்வரின் வீட்டுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.