சனல் 4 நிறுவனத்தின் காணொளிக்கு பதிலளிக்கும் கோட்டாபயவின் அறிக்கை: கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கடிதத் தலைப்பில் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட இழுக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 நிறுவனம் வெளியிட்ட ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் கோட்டாபய ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையிலேயே பெயர் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச என பொறிக்கப்பட வேண்டிய பெயரானது "குா்டுடுபுா்யு ருா்ஜபுகு்ஷ" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழில் பெயரை சரியாக குறிப்பிடாமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பாக தாம் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் மற்றும் வசதிகளையும் பெறும் கோட்டாபய ராஜபக்ச, இந்த தவறை கட்டாயம் சரி செய்ய வேண்டும் எனவும் அநுருத்த பண்டார மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam