கோட்டாபயவிற்கு மீண்டும் அடைக்கலம் கொடுக்க சிங்களதேசம் தயாராகிக்கொண்டிருக்கின்றது: சி.சிவமோகன்
“கோட்டாபய ராஜபக்சவிற்கு மீண்டும் அடைக்கலம் கொடுக்க சிங்கள தேசம் தயாராகிக்கொண்டிருக்கின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாளில் நடைபெற்ற மாபொரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இத தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
"கோட்டாபய ராஜபக்ச செய்த இனப்படுகொலைக்கு அவருக்கு மகுடம் சூடும் நடவடிக்கைகளை சில பிக்குகள் ஆரம்பித்துள்ளார்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இரண்டாயிரம் நாட்களை கடந்துள்ளது.
இந்த யுத்தக்குற்றம் இனப்படுகொலை அனைத்திற்கும் தலைமை தாங்கியவர் கோட்டாபய ராஜபக்ச, அவரின் தலைமையின் கீழ் 50 ற்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள்.
தருஸ்மன் அறிக்கை
எங்கள் கோரிக்கை தருஸ்மன் அறிக்கை ஏற்கனவே ஐ.நா சபையில் தாக்கல் செய்யப்பட்டு
விட்டது.
இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினை சர்வதேசத்தின் ஐ.நா சபையின் அரசியல் விவகார பிரிவில் உள்வாங்கப்பட்டு விட்டது.
எனவே இனி ஏன் கால நீடிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது தான் எங்களின் கேள்வி.
இன்று பதவியினை இழந்து எந்தவித சிறப்பு உரிமைகளும் அற்று எந்த நாட்டிற்கும் செல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றார் கோட்டாபய ராஜபக்ச.
கோட்டாபயவிற்கு அடைக்கலம் கொடுக்கும் சிங்கள தேசம்
மீண்டும் அவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு சிங்கள தேசம் ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
இன்று அவர் செய்த இனப்படுகொலைக்கு அவருக்கு மகுடம் சூடும் நடவடிக்கைகளை சில பிக்குகள் ஆரம்பித்துள்ளார்கள்.
சிங்கள தேசம் அதற்கு ஒத்தூதிக்கொண்டிருக்கின்றார்கள். சிங்கள அரசியல் வாதிகள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனவே இது எங்களுக்கு கட்டியம் கூறுகின்றது.
மீண்டும் இந்த இனப்படுகொலையாளிகளை அழைத்துக்கொண்டுவந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.
இன்று நாம் ஐ.நா சபையிடம் கோரியிருப்பது இந்த இனப்படுகொலைகளை நடத்தி இலங்கைக்கு வந்தவர்களாக இருக்கட்டும் அல்லது வேறு நாடுகளில் சென்று இருப்பவர்களாக இருக்கட்டும் இவர்கள் அனைவரும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படாதவரை இலங்கைத் தமிழர்களுடனான சுமூகமான உறவினை அரசியல் நிலைப்பாட்டை ஸ்திரத்தன்மையினை இந்த நாடு நிலைத்து நிற்க முடியாது.
யுத்தமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்
இந்த பொருளாதாரத்தில் நாடு இன்று வீழ்ந்து கிடப்பதற்கான முக்கிய காரணம் தமிழர்கள் மீது பெருமெடுப்பில் நடத்தப்பட்ட இனப்படுகொலை தான் யுத்தங்கள் தான். பெருந்தொகையான பணத்தினை முதலிட்டு யுத்தங்களை நடத்தி முடித்தார்கள்.
இன்று அவர்கள் பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. ஆனால் ஒரு சிங்கள அராசியல் தலைவர் இன்றுவரை நாடாளுமன்றத்திலும் சரி பொது வெளியிலும் சரி யுத்தத்தால் தான் நாடு அதளபாதாளத்திற்கு சென்றது என்று கூறுகின்றார்களா இல்லையே.
எனவே எமது உரிமைகளை மட்டும் நிலைநிறுத்தத்தான் நாங்கள் இருக்கின்றோம்
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட யுத்தக்குற்றங்களை இனப்படுகொலைகளுக்கு
பெருந்தொகையான ஆதாரங்கள் இருக்கின்றன அனைத்தும் வெளியில் வந்த உண்மைகள்
இவைகளையும் தருஸ்மன் அறிக்கையினையும் முன்னிறுத்தி இங்கு ஒரு சர்வதேச விசாரணை
உடனடியாக நடத்தப்படவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.