கருணை காட்டுமா அமெரிக்கா....! மனைவியுடன் பரிதவிக்கும் கோட்டபாய (video)
அமெரிக்காவில் மீண்டும் குடியுரிமை பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது குடும்பத்துடன் டுபாயில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்க குடியுரிமையை மீள வழங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் தனது வழக்கறிஞர்கள் மூலம் கோட்டாபய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2019ஆம் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அமெரிக்க குடியுரிமையை நீக்கியிருந்தார்.
இந்நிலையில் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள கோட்டபாய முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்க அதிகாரிகளால் இன்னும் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பொது எந்தவொரு நாடும் புகலிடம் வழங்கத் தவறியதையடுத்து, தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்குமாறு கோத்தபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அமெரிக்க குடியுரிமைக்கான கோட்டபாயவின் முயற்சிகள் இன்னும் வெற்றிபெறவில்லை என்பதை அமெரிக்க தூதரகத்தின் ஆதாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
