எண்ணெய் தாங்கி உடன்படிக்கை விவகாரம்! கோட்டாபய ராஜபக்சவிற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை எண்ணெய் தாங்கி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
எல்லே குணவன்ச தேரர், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் வக்முல்லே உதித்த தேரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சீனக்குடா எண்ணெய் தாங்கி பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி உடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அதிகாரம் வழங்கிய அமைச்சரவை பத்திரத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தின் அனுமதி
மனுதாரர்கள் சார்பில் இன்று முன்னிலையான சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே, மனுக்களை திருத்த நீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்காத காரணத்தினால் அவரை தனிப்பட்ட முறையில் பிரதிவாதியாக சேர்க்க நீதிமன்றில் அவர் அனுமதி கோரியிருந்த நிலையில், நீதியரசர்கள் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.
அத்துடன் இந்த மனுக்கள் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
