கடைசி தருணம் வரை ஜனாதிபதி மாளிகையில் பதுங்கியிருந்த பசில் உட்பட பல முக்கியஸ்தர்கள்
கடந்த ஜுலை 09ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்த போது வெளிவிவகார அமைச்சு பக்கத்தில் அமைந்திருந்த வாயிலாக பசில் ராஜபக்ஷ வெளியேறியதாகத் தெரியவந்துள்ளது.
அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளரும் முப்படைத் தளபதிகளும், பொலிஸ் மா அதிபரும் ஜனாதிபதி மாளிகையின் செயற்பாட்டு அறையில் இறுதித் தருணம் வரை பாதுகாப்புப் படையினரை வழிநடத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மாளிகையின் இரண்டாவது மாடியில் இருந்த கோட்டபாய ராஜபக்ச, பாதுகாப்பாக கடற்படைத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் தலைமையில் ரணபாகு கப்பலின் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
