2 மணி நேரமாக கிடுக்குப் பிடி! கோட்டாபயவை சுற்றி வளைத்த விசாரணை
கொழும்பு தற்போது வெள்ள நீரில் முழ்குகின்ற சம்பவம் குறித்து நகர அபிவிருத்தி அமைச்சின் நிரந்தர செயலாளராக பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ச மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அத்தோடு, கோட்டாபயவின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
கொழும்பு நகரில் அரச காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஏன் கோட்டாபய ராஜபக்ச தொடர்பு படுத்தப்படவில்லை எனவும் சந்தேகம் எழுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச நகர அபிவிருத்தி நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு பதில் கூறுவாரா அல்லது விசாரணை ஆணைக்குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்கின்ற கேள்வி தான் தற்போது எழுந்திருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.