ஞானசார தேரரை நியமித்தது ஏன்? மனம் திறந்தார் கோட்டாபய
நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya rajapaksa) தெரிவித்துள்ளார்.
அது சம்பந்தமாக தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரர், அந்த செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில், இந்த செயலணிக்குழு தொடர்பான வினவப்பட்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஆலோசனை வழங்க நியமிக்கும் செயலணிக்குழுவிற்கான தலைவர் பதவியில் தான் விரும்பிய நபரை நியமிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தால், நண்பர் ஒருவருடன் பழகக்க கூட கட்சித் தலைவர்களிடம் அனுமதி பெற நேரிடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நீதியமைச்சராக அலி சப்றியை நியமித்த போது இதேபோன்ற எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. எனினும் அலி சப்றி தற்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வயைில் சேவையை நிறைவேற்றி வருகிறார் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan