மௌனம் காத்து வந்த கோட்டாபயவின் திடீர் நடவடிக்கை! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
கடந்த வருடம் ஜுலை மாதம் பதவி விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது நெருங்கிய உதவியாளரும், ஊடக உரிமையாளருமான ஒருவரின் தலைமையிலான புதிய அரசியல் கட்சி மூலம் தோல்வியடைந்த தனது பிரதிமையை மீண்டும் ஏற்படுத்த முனைந்துள்ளார்.
அந்த ஊடக உரிமையாளர் தமது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.
பொது மக்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து சலுகைகளும் வசதிகளும் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் வாங்கப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு (தாய்நாட்டு மக்கள் முன்னணி) ஆதரவளிப்பதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் தாய்நாட்டு மக்கள் முன்னணி தனது யாப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |