இந்திய ரோவின் அதி உச்ச பாதுகாப்புடன் இராணுவ விமானத்தில் வெளியேறிய கோட்டாபய - இராணுவ ஆய்வாளர்
கோட்டாபயவினை காப்பாற்றும் பின்னணியில் இந்தியா தான் செயற்பட்டு வருகிறது எனவும், கோட்டாபய பதவி விலகினால் சட்ட பிரகாரம் அரச தலைவர் பதவிக்கு அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரமுடியும்.
ஆனால் இலங்கையின் அரச தலைவர் பதவிக்கு ரணில் வரக்கூடாது என்பது இந்தியாவின் ஆணித்தணமான முடிவாக உள்ளது என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கம் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோட்டாபய பதவி விலகுவதற்கு முன்னர் ரணில் பதவி விலக வேண்டும் என இந்தியா திட்டமிடுகிறது. ஆனால் ரணிலை ஜனாதிபதியாக கொண்டு வர வருவதற்கு அமெரிக்கா திட்டமிடுகிறது. அதனால் தான் பதவி விலகலில் தற்போது இழுப்பறியான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.