கோட்டாபயவை பிரதமராக நியமிப்பது பற்றி எவ்வித யோசனைகளும் இல்லை: ருவன் விஜேவர்தன
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக நியமிப்பது பற்றியோ அல்லது வேறு எந்தப் பதவியை வழங்குவது பற்றியோ எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மத வைபவம் ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ச தொடர்பாக பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை.

தேசிய மனித உரிமைகள்
கோட்டாபய ராஜபக்ச அரசியலில் நீடிப்பதா இல்லையா என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படவே தொடர்ந்தும் விருப்பம் கொண்டுள்ளார். அதற்கான கதவுகள் தாராளமாகவே திறந்துள்ளது.

தற்போதைய நிலையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன், அனைத்துக் கட்சி
அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri