வெளிநாடு செல்வதை மகிந்தவுக்கு அறிவிக்காத கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடு செல்வதை மகிந்தவிடம் மட்டும் அறிவிக்காத கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கடந்த 26 ஆம் திகதி இலங்கையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இவ்வாறு கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல உள்ளமை குறித்து தனது குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அறிவித்திருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதியான தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்திருக்கவில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச, புதல்வர் மனோஜ் ராஜபக்ச, மருமகள் எஸ்.டி. ராஜபக்ச, பேரப்பிள்ளை ஆகியோர் அமெரிக்காவுக்கு செல்வதற்காக துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றனர் என விமான நிலையத்தின் ஊடாக தகவல்கள் வெளியாகி இருந்தன.



