கொழும்புக்கு வந்த பின் செய்யப்போவது என்ன..! கோட்டாபய வகுத்துள்ள இரகசிய வியூகம் - அரசியல் ஆய்வாளர் தகவல்
இலங்கைக்கு கோட்டாபய வந்தால் நாடாளுமன்றத்திற்குள் வரும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருதது தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கைக்கு கோட்டாபய ராஜபக்ச வந்தால் மொட்டு கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக்கப்பட்டு அந்த வெற்றிடம் மூலம் அவர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அவர் அப்படி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மொட்டுக்கட்சியை அவர் மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியில் நிரந்தரமாக உட்காரக்கூடிய வழி இருக்கிறது.
அவருக்கும் பொது மக்களுக்குமான பிரச்சினை ஒன்றுமில்லை. அவருக்கு எதிராக பொது மக்களின் போராட்டம் நடைபெற வாய்ப்பில்லை.
ஆனால் கோட்டாபய நாடாளுமன்றத்திற்குள் வருவாராக இருந்தால் ரணிலின் ஆட்சிக்கு குடைச்சலாகவே இருக்கும். அதனால் தான் ரணில் கோட்டாபய இலங்கை வருவதை தடுத்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல முக்கிய தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
போலீஸ் நிலையத்தில் மயிலை அடிக்கச்சென்ற கோமதி, ஆதாரத்தை காட்டிய மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு எபிசோட் Cineulagam
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri