இலங்கை திரும்பும் கோட்டாபயவுக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு! ரணிலிடம் சென்ற தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்புக்களை செய்து கொடுக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான வசதிகளையும், அவருக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிக முக்கிய கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கும், நாட்டில் அவரது பாதுகாப்பிற்கு எட்டடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் பசில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை மிக முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருங்கிய உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.
எனினும், கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.