இலங்கைக்கு வரும் கோட்டாபய! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான புதிய அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றிடம் அமைச்சர் சப்ரி இதனை குறிப்பிட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராஜதந்திர மார்க்கமாகவே முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய விரும்பியவாறு பயணம் செய்ய முடியும்

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியவாறு பயணம் செய்யலாம் என்றும் அலி சப்ரி கூறினார்.
தற்போது தாய்லாந்தில் வசிக்கும் கோட்டாபய எதிர்வரும் நவம்பர் மாதம் வரை அங்கு தங்கியிருப்பார் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடைவார் என கோட்டாபயவின் நெருங்கிய உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க நேற்றையதினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan