கோட்டாபயவிடம் இருந்து பொன்சேகாவுக்கு சென்ற அழைப்பு! ரணிலுக்கு கிடைத்த பதவி
நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தவேளை ஜனாதிபதி பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றார் என ஐக்கிய தேசயக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் ஜேவிபியின் தலைவருக்கும் பிரதமர் பதவியை வழங்க அழைப்பு விடுத்தார்.
மறுக்கப்பட்ட கோட்டாபயவின் அழைப்பு
எனினும், அவர்கள் அனைவரும் அதனை ஏற்க மறுத்தனர் எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஸ்திரதன்மையேற்பட்டுள்ளதால் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் உட்படசில குழுக்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன.
இக்கட்டான நேரத்தில் சஜித், சரத் பொன்சேகா உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்த வேளை, ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் அதனை ஏற்றுக்கொண்டு நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்தியுள்ளார், எனினும் எதிர்கட்சி உட்பட சில குழுக்கள் சதிவேலை மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |