அரசியலமைப்பை அப்பட்டமாக மீறிய கோட்டாபய ராஜபக்ச - சட்டத்தரணி சுனில் வடகல
இலங்கையின் குடிமக்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியாகக் கருதுவதாகக் கூறிய சட்டத்தரணி சுனில் வடகல, அவர் ஒருபோதும் நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாக்கவில்லை எனவும், அரசியல் அமைப்பை அதை அப்பட்டமாக மீறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜாதிக ஜன பலவேகய (ஜேஜேபி) சட்டத்தரணிகள் நேற்று (14) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் ஊடாக நியமிக்க முடியும் எனவும் வடகல தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்காததன் அடிப்படையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு சபாநாயகரே பொறுப்பு
அரச துறை ஊழியர் ஒருவர் 24 மணி நேரத்திற்குள் துறைத் தலைவருக்குத் தெரிவிக்காமல் வேலைக்குச் செல்லவில்லை என்றால், துறைத் தலைவர் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியும்.
அதேபோன்று தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு சபாநாயகரே பொறுப்பு என வடகல தெரிவித்துள்ளார். நிர்வாகம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சாதகமாக செயல்பட்டு அப்பாவி மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய நிலைமை போராட்டம் மக்களால் உருவாக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலை ஜனாதிபதியான ஏற்க முடியாது
ஜனாதிபதி இலங்கை மக்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதேநேரம் ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சபாநாயகர் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை.
எனவே, அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் இன்று (15) நாடாளுமன்றத்தைக் கூட்டி புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் என்பதை நாம் இயல்பாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக அல்லது ஜனாதிபதியாக நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam