நாட்டு மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் பயனில்லை! கோட்டாபயவின் அறிவிப்பு
நாட்டு மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது பருப்பு அல்லது அரிசி விலைகளை கவனிப்பதற்கு என்றால், அதில் பயன் எதுவுமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உடுபெத்தாவ முன்னேஹெபொல விவசாய பண்ணையை இன்று பார்வையிட்ட பின்னர் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கமும் கூட கமத்தொழிலுக்கு சேதனப் பசளையை பயன்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் இது சிரமமான பணி. எனினும் இறுதியில் எந்த தலைவரும் இப்படியான தீர்மானத்தை எடுக்கவில்லை.
மக்கள் என்னை தெரிவு செய்தது பருப்பு விலை, அரிசி விலையை கவனிப்பதற்கு என்றால், என்னால் எந்த பயனுமில்லை. நாட்டில் இதனை விட பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக கமத்தொழில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நான் பதவிக்கு வந்த நாளில் இருந்து பசளைகளை இலவசமாக வழங்கினேன்.
உழவர்களில் வாழ்க்கை நிலைமை உயர்த்தவே அதனை செய்தோம். நெல்லுக்கு உறுதியான விலையை நாங்களே வழங்கினோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam