கோட்டாபயவின் 'ட்ரிபொலி' புலனாய்வு குழுவின் அதிர்ச்சியளிக்கும் கொடூரங்கள்!
கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டவர்கள், ஊடகவியலாளர்களை கொலைச் செய்வதற்கு மற்றும் பல கொடூரங்களை செய்வதற்கு பயன்படுத்திய 'ட்ரிபொலி' புலனாய்வு குழு ‘Tripoli Platoon' தொடர்பில் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போது ஜேர்மனியில் வசிக்கும் சனத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அரச பயங்கரவாதம்
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இது தொடர்பிலான இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், Who is Lasantha? என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

அதில் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் அனைத்து விடயங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ட்ரிபொலி' புலனாய்வு குழு ‘Tripoli Platoon' முழு விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
'ட்ரிபொலி' புலனாய்வு குழு
'ட்ரிபொலி' புலனாய்வு குழு ‘Tripoli Platoon' யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டாது புலனாய்வு பிரிவை சேர்ந்து புலனாய்வு குழுவாகும்.இது மருதானையில் இருந்த பழைய 'ட்ரிபொலி' சந்தைக் (Market) கட்டிடமாகும். அதில் அமைக்கப்பட்டதால் அந்த கட்டிடத்தின் பெயரையே வைத்துள்ளனர்.
குறித்த கட்டிடத்திலேயே ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்தி சென்று மிருகத்தனமாக தாக்கினர்.அச்சந்தர்ப்பத்தில் நான் உட்பட எமது சங்கத்தின் உறுப்பினர்கள் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு நாலா பக்கமும் கொடுத்த அழுத்தத்தால் அதிகாலை கீத் நொயார் விடுவிக்கப்பட்டார்.
அந்த ஒன்பது நிமிடங்கள்
அந்த ஒன்பது நிமிடங்களில் கீத் நொயார் எவ்வாறு தப்பித்தார் என்பது இன்றும் அந்த நிகழ்வு என் கண்ணுக்குள் இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி அன்றைய பாதுகாப்பு செயலாளருக்கு எடுத்த அழைப்பு பின்னர் அன்றிருந்த இராணுவ புலனாய்வு பொறுப்பதிகாரி அமல் கருணாநாயக்கவுக்கு எடுக்கப்பட்ட அழைப்பு மற்றும் அந்த தகவல் எந்த விதாரணவுக்கு அறிவிக்கப்பட்டு ஒன்பது நிமிடங்களில் கீத் நொயார் விடுவிக்கப்பட்டார்.
அன்று ஆட்கள் கடத்தப்படுவது மற்றும் கொலை செய்வது அனைத்தும் மகிந்த ராஜபக்ச அறிந்திருந்தார்.ஆனால் அவர் அதை காட்டிக் கொள்ளவில்லை.