அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து கோட்டாபய வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கோட்டபாய இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து கோட்டாபயவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
விசேட சலுகைகள்
அரசாங்கத்திற்கு தேவை ஏற்படின் அதனை நிறுத்தலாம். போரை முடிவுக்கு கொண்டு வந்த காரணத்திற்காக விசேட சலுகைகள் வழங்க வேண்டியதில்லை என ஆளும் தரப்பினர் கூறுவதாக ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதற்கு “அப்படியும் இருக்கலாம்” என சிரித்து கொண்டோ மேலதிக தகவல்களை வழங்காமல் கோட்டாபய அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.