ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த சர்வதேச மத போதகர்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கான ஸிம்பாப்வே தூதுவராக பணியாற்றும் சுவிசேஷ போதகர் ஊபோட் ஏஞ்சல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து போது அவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
தனது விஜயம் தொடர்பில் பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த அவர், ஸிம்பாப்வே ஜனாதிபதி வழங்கிய விசேட பணி காரணமாக ஜூன் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை ஏமாற்றும் மத போதகர்
பிரித்தானியா, ஸிம்பாப்வே கலப்பு வம்சாவளியைச் சேர்ந்த ஊபோட் ஏஞ்சல், உலகம் முழுவதும் ஊழியங்களை ஏற்பாடு செய்யும் சர்வதேச பணக்காரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் உலகின் பணக்கார போதகர்களில் ஒருவராகக் கூறப்படுகிறது.
மேலும் பணம் சம்பாதிப்பது மற்றும் தவறான வழியில் பணத்தை மீட்பது பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
இலங்கை மக்களை ஏமாற்றிய ஊபோட் ஏஞ்சல்
இதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்து ஊபோட் ஏஞ்சல் பணம் சம்பாதிக்கும் ஊழியத்தை மேற்கொண்டிருந்தார், அங்கு அவர் ஒரு முழுமையான ஏமாற்று வேலை செய்ததாக அதில் பங்குபற்றியவர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அனுராதபுரத்திலுள்ள பெண் மந்திரவாதியான ஞானக்காவின் தீவிர பக்தரான கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேச ரீதியாக ஏமாற்று வேலை செய்யும் மத போகரை சந்தித்துள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.