பாதாள உலகக் குழுவைக் கட்டுப்படுத்த கோட்டாபயவிடம் பாடம் கற்றுக்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் அறிவுரை
பாதாள உலகக்குழு செயற்பாடுகளை இல்லாதொழிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் அவர் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருளை முற்று முழுதாக இல்லாதொழித்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய சிறந்த தலைவர்
பாதாள உலகக் குழு படுகொலைகளை இல்லாதொழிப்பது எவ்வாறு என்பதை கோட்டாபய நாட்டுக்கு செய்து காட்டினார் என குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் கடுமையான முறையில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். அவர் எவ்வாறு இதைச் செய்தார் என்பது குறித்து பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
போர், பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் என்பனவற்றை இல்லாதொழிப்பதில் கோட்டாபய சிறந்த தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டில் மிகவும் தோல்வியடைந்த ஓர் ஜனாதிபதி எனவும் அவர் நாட்டை சாப்பிட்டார் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
