இலங்கை மக்களின் நேர்மையைக் கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்! நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சுற்றுலாப்பயணி (Video)
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இலங்கையரின் செயலை கண்டு வியப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண், கண்டி நகருக்கு பொது போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு தனது பையை பேருந்தில் மறந்து விட்டு இறங்கி சென்றுள்ளளனர். பேருந்தும் கொஞ்ச தூரம் சென்ற போது தான் பை தவற விட்டத்தை குறித்த பெண் கண்டுபிடித்துள்ளார்.
வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி
தவறவிட்ட பைக்குள் 1000 டொலர், கையடக்க தொலைபேசி, ஐபேட், கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் காணப்பட்டுள்ளன.
நடுவீதியில் என்ன செய்வதென தெரியாமல் பேருந்தை துரத்தி செல்வதற்கு முச்சக்கர வண்டி ஒன்று தேடிய போதிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. எனினும் ஓரிரு நிமிடங்களில் இளைஞன் ஒருவர் பை ஒன்றுடன் ஓடிவருவதனை அவதானித்தோம். அந்த இளைஞன் எங்களை தேடியே வந்தார்.
எங்களிடம் பையை ஒப்படைத்தார். எங்களுக்கு மிகவும் ஆச்சரியமான இருந்தது. எனது பெற்றோர் அவருக்கு பணம் கொடுத்தனர். எனினும் அவை எல்லாம் தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
எங்கள் பையை கொண்டுவர பேருந்தில் இருந்து இறங்கியமையினால் அந்த இளைஞனை பேருந்து விட்டு சென்றுவிட்டது. பின்னர் அவர் அடுத்த பேருந்திற்காக காத்திருந்த நிலையில் எனது பெற்றோர் அவரை சாப்பிட வருமாறு அழைத்த போதும் அதற்கு மறுத்து விட்டார்.
இலங்கையர்களின் நேர்மையான குணம்
அவரை பார்ப்பதற்கு மிகவும் ஏழ்மையாக இருந்தார், ஆங்கிலம் பெரிதாக தெரியவில்லை. எனினும் பொது போக்குவரத்து சேவையில் யார் வேண்டும் என்றாலும் திருடியிருக்கலாம். எனினும் அப்படி செய்யாமல் நடந்து கொண்டதனை பார்த்து வியந்து விட்டோம்.
எனது பெற்றோர் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.
இப்படியும் மக்களா என்ற வியப்பை ஏற்படுத்தியது. இலங்கை மிகவும் அழகானது என அந்த பெண் தனது நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
