கூகுளின் வியக்கவைக்கும் புதிய வசதி
உலகிலேயே அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் இணையத்தளமானது அன்றாடம் புதுப்புது வியக்கவைக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் கூகுள் குரோம் இப்போது URLகளில் எழுத்துப் பிழைகளை சரிபார்த்து, திருத்தங்களின் அடிப்படையில் இணையதளங்களைப் பரிந்துரைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொழி கற்பவர்கள் மற்றும் எழுத்துப் பிழைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில், முன்னர் பார்வையிட்ட இணையதளங்களைப் பெறுவதை எளிதாக்குவதன் மூலம் தேடுதலை மேம்படுத்தும் என்று கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அம்சங்கள் முதலில் கணனிகளுக்கும் பிறகு அதனைத்தொடர்ந்து தொலைப்பேசிகளுக்கு அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வை உள்ளவர்களுக்கு உதவ AI ஐப் பயன்படுத்தும் கூகுளின் லுக்அவுட் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்பட விளக்கம்
இதன் மூலம் தலைப்புகள் இல்லாவிட்டாலும் பட விளக்கங்களைச் செயலாக்கி உருவாக்க முடியும்.
உதாரணமாக ஒரு புகைப்படத்தில் உள்ளதைப் பற்றி மக்கள் கேள்விகளைக் கேட்டு அதற்கான பதிலை பெற்றுக்கொள்ள முடியும். இந்த அம்சம் Deepmind மூலம் இயக்கப்படுகிறது எனவும் பீட்டா சோதனைக் காலத்தைத் தொடர்ந்து இந்த அம்சம் வெளியிடவுள்ளது.
இதேவேளை கூகுள் மேப்ஸ் ஒரு பயனுள்ள வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சக்கர நாற்காலி போன்ற அமைப்பு செல்லும் இடம் சக்கர நாற்காலி அல்லது தள்ளுவண்டிக்கு உகந்ததா என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதேவேளை சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓய்வறைகள் என்பவற்றை அடையாளப்படுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.