ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்
கோவிட் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் இன்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாவது,
ஊழியர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்தியதன் விவரம் குறித்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தால் அதற்கான மருத்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
மத ரீதியிலான விதி விலக்கு கோர விரும்பினால் அதற்கான ஆவணங்களும் காட்டப்பட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்போம்.
ஜனவரி 18- ஆம் திகதிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லையெனில், 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அதைத்தொடர்ந்து, சம்பளம் இல்லாத விடுப்பும் தொடர்ந்தும் பணி நீக்கமும் செய்யப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த கூகுள், "தடுப்பூசி செலுத்தக்கூடிய எங்கள் ஊழியர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களின் தடுப்பூசி கொள்கையிலும் நாங்கள் உறுதியாக நிற்போம்” எனவும் தெரிவித்துள்ளது.