கூகுளின் Help Me Write! புதிய வசதி தொடர்பில் வெளியான காணொளி (Video)
கூகுளின் சமீபத்திய I/O மேம்படுத்தல் மாநாடானது செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பானதாகவே இருந்தது.
2023இற்கான I/O மேம்படுத்தல் மாநாட்டில் நிறுவனம் அறிவித்த குறிப்பிடத்தக்க புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியாக “Google Help Me Write” காணப்படுகிறது.
அதன் பெயரை போலவே Google Help Me Writeஆனது ஜிமெயில் மற்றும் டாக்ஸ் போன்றவைகளில் வரும் புதிய அம்சமாகும்.
நேரத்தையும் வளங்களையும் சேமிக்கும் தொழிநுட்பம்
சாதாரண மெயிலொன்றை எழுதுவதிலிருந்து முறையான அழைப்பினை விடுப்பது வரை Google Help Me Writeஆனது AI தொழிநுட்ப உதவியுடன் செயற்பட்டு பயனர்களுக்கு நேரத்தையும், வளங்களையும் சேமிக்க உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பயனர் அறிவுறுத்தலை உள்ளீடு செய்தவுடன், AI தொழிநுட்பமானது அந்த அறிவுறுத்தலைப் பகுப்பாய்வு செய்து, விரிவான அல்லது சுருக்கமான பதிப்பை உருவாக்குகிறது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் காணொளியொன்றும் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
