குற்றமற்ற பொலிஸ் மா அதிபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை: பாலித சீற்றம்
குற்றச்சாட்டுக்கள் அற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபரின் பதவிகாலம் நீடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டின் ஒழுக்கம் மிகவும் சீர்குலைந்துள்ளதால், பொலிஸ் மா அதிபர் ஓய்வு பெற்றதன் பின்னர், புதிய பொலிஸ் மா அதிபரை பதவியமர்த்துவதில் சற்று சிந்திக்க வேண்டும்.
நீதிமன்ற வழக்குகள்
இதன் காரணமாகவே தற்போதைய பொலிஸ் மா அதிபரின் பதவியை ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மூத்த டி.ஐ.ஜி.க்கள் உட்பட டி.ஐ.ஜி.க்கள் வரிசையாக இருப்பதாகவும், அவர்களின் அனுபவத்திற்கேற்ப ஏற்ப, பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில் ஒன்று முதல் நான்கு வரை வழக்குகள் இருக்கின்றன.
நாட்டில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நடைமுறைக்கே வேண்டிய அணிக்கே இந்த நிலை என்றால் நாட்டின் ஏனைய பகுதிகளில் சட்டம் ஒழுக்கம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
