பொலிஸ் மா அதிபர் விவகாரம்: விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு...!
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத காலத்துக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, விக்ரமரத்ன இன்று (09.07.2023) அல்லது நாளை (10.07.2023) பணிக்குச் சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு செய்தி வெளியாகியுள்ளது.
பொலிஸ்மா அதிபராக இருந்த விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று மாத காலத்துக்கு அவரின் சேவையை நீடித்தார்.
பொலிஸ் தலைமையக வட்டாரங்கள்
இந்தச் சேவை நீடிப்பு கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும்போது அவருக்குப் பொலிஸ் மரியாதை செலுத்தப்படும் எனவும், ஆனால் அவரது சேவை நீடிப்பு முடிந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
விக்ரமரத்ன 2020 இல் பொலிஸ்மா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோருக்கு இடையில் வெற்றிடமாக உள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
