நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சித் தகவல் - செய்திகளின் தொகுப்பு
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் 24 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
எப்பாவளையில் அமைந்துள்ள லங்கா அரச பொஸ்பேட் நிறுவனத்தின் கண்காணிப்புச் சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை அஸ்வெசும நிவாரணம் கோரி விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தில் 20 இலட்சம் குடும்பங்கள் காப்புறுதிப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையுள்ளவர்கள் என்பது விசேட அம்சம் என்றும் கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |