இலங்கையில் திருமணம் செய்ய உள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி
இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு வீடு வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் தங்கள் சொந்த வீட்டில் வாழ விரும்பும் இளம் தலைமுறையினரின் கனவை இந்த திட்டம் நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் வழங்கும் திட்டம்
நாட்டில் உள்ள வீட்டுவசதி பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், புதிய வீடுகளைக் கட்ட அரச ஊழியர்களுக்கு கடன் வழங்கும் திட்டமும் அரசாங்கத்திடம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 37 நிமிடங்கள் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam