போர்ச்சுகல் செல்லும் பிரித்தானியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தியிருக்காவிட்டால் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கோவிட் தொற்று தொடர்பாக பிசிஆர் அல்லது விரைவான ஆன்டிஜென் பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுற்றுலா இடங்களுக்கு வந்தவுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டமையை உறுதிப்படுத்த தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, போர்ச்சுகலின் நிலப்பகுதிக்குள் நுழைந்தவுடன், ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா மற்றும் மெடர்னா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டிருப்பதை வருகையாளர்கள் உறுதி செய்யவேண்டும்.
அல்லது அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் எதிர்மறை சோதனைக்கான ஆதாரங்களை காட்டத் தேவையில்லை.
இந்த விடயம் தொடர்பில் செய்தி தொடர்பாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
“பிரித்தானியர்கள் சுற்றுலா மேற்கொள்ளும் பிரபலமான இடமாக போர்ச்சுகல் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 2.8 மில்லியன் பிரித்தானியர்கள் அங்கு பயணம் செய்துள்ளனர். அழகான கடற்கரைகள், அற்புதமான நகரங்கள் மற்றும் அழகான கிராமப்புறங்களை அங்கு காணலாம்.
இந்நிலையில், பயணக்கட்டுப்பாடுகளில் தளர்வு செய்வது வரவேற்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார். இதன்படி, போர்ச்சுகல் புறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பக்கவாட்டு ஓட்டப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் பிசிஆர் சோதனைகள் 72 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும், மேலும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பாக பயணிகள் locator அட்டையையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இதேவேளை, போர்த்துக்கீசிய தீவுகளான அசோர்ஸ் மற்றும் மெடிராவுக்குச் செல்லும் பயணிகள் இரண்டு வார தனிமைப்படுத்தலைத் தவிர்க்க பிசிஆர் சோதனை அல்லது தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.