இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: ஜேர்மன் சட்ட நிறுவன பிரதிநிதி யாழில் தெரிவிப்பு!
ஜேர்மனியில் பல்வேறு பிரச்சினைகளுடன் வருகைதந்தவர்களில் இரண்டு இலட்சம் இலங்கை மக்களுக்கு எமது சட்ட நிறுவனம் சேவை வழங்கியமையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என முட்மன் கோறன்பிளோ சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணி கோறன்பிளோ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ( 24.04.2023) யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், எமது ஜேர்மன் சட்ட நிறுவனமானது தென்னாசியாவின் கிளையினை அண்மையில் கொழும்பில் திறந்து வைத்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வட மாகாணத்துக்கான கிளையினை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்துள்ளோம்.
வழக்குகள் வெற்றி
1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நமது சட்ட நிறுவனமானது இலங்கையில் இருந்து வந்த பலரின் குடியேற்றத்துக்கான இலவச ஆலோசனைகளையும் தேவை ஏற்படின் குறைந்த கட்டணத்தில் நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்து வெற்றி கண்டது.
எமது நிறுவனம் இலங்கையில் இருந்து ஜேர்மனி நாட்டுக்குள் பிரவேசித்தவர்களில் சுமார் 2 இலட்சம் பேரின் வழக்குகளை எமது நிறுவனமே கையாண்டது.
உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
எமது நிறுவனத்தின் பணி புரியும் சட்டத்தரணி எம்.டி.எஸ் இராமச்சந்திரன் இலங்கையைச் சேர்ந்தவர் இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்தவராக இருப்பது வழக்குகளை இலகுவாகக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருந்தது வருகிறது.
ஆகவே, எமது சட்ட நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜேர்மன் நாட்டுக்குள் வருகை தரவுள்ள மாணவர்கள், வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிப்போர், சுற்றுலா விசாக்களில் வருகை தருவோர் இலவசமான சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.