கனடாவில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
கனடாவில் சரியான முறையில் நேர்மையாக குடியிருப்புகளுக்கு வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கும் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
குறித்த புதிய சட்டத்தை கனேடிய மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத சலுகைகள் அடகுக் கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கப் பெறுவதாகத் கூறப்படுகின்றது.
கடன் புள்ளிகள்
இந்நிலையில் குறிப்பாக கடன் புள்ளிகள் வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை எனவும் இளம் கனேடியர்கள் தங்களது கடின உழைப்பினை வாடகைக்காக செலவிட்டு வருவதாகவும் அவர்களுக்கு நலன்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், வாடகைக்கு குடியிருப்பாளர்களை பாதுகாக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan