மத்திய அதிவேக வீதியில் நாளை பயணிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதியில் நாளை நண்பகல் வரையில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில்,மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும்.
இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan