விரைவில் அஸ்வெசும பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு வரவிருக்கும் பணம்!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 622,495 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளையே நலன்புரி நம்பிக்கைச் சபை விடுவித்துள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை மாதத்தில் இருந்து 31.03.2024ஆம் திகதி வரையிலும், இடைநிலைப் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் குழுவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 2500 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை மாதம் முதல் 31.12.2023 ஆம் திகதி வரையிலும் கொடுப்பனவுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் கீழ் பாதிக்கப்பட்ட மற்றும் இடைநிலை பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கான கொடுப்பனவுகளை 2024 ஜூலை முதல் 2024 டிசம்பர் வரையில் 5000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக வறுமை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழானவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவும் தொடர்ச்சியாக வழங்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரும் ஆணையாளருமான ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 10 மணி நேரம் முன்

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
