முல்லைத்தீவு பாடசாலை மாணவனின் நற்செயல்
முல்லைத்தீவில் வீதியில் சிதறிக்கிடந்த மதுப்போத்தல்கள், பியர் ரின்களை அகற்றி வீதியை பாடசாலை மாணவன் ஒருவர் சுத்தம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு குமுழமுனை 6ஆம் கட்டை பகுதி பிரதான வீதியில் மதுப்பிரியர்களின் அத்துமீறிய செயற்பாட்டால் மதுப்போத்தல்கள் பியர்ப்பேணிகள் உடைந்து சிதறி காணப்பட்டுள்ளது.
அதனை பலரும் கண்டும் காணாமலும் பயணித்த நிலையில், இன்றையதினம்(04.02.2025) குறித்த வீதியால் சென்ற பாடசாலை மாணவன் இராஜகுமார் அபிசாங்கன் அருகில் இருந்த வீட்டில் விளக்குமாற்றை வாங்கி வீதியில் இருந்த கண்ணாடி ஓடுகளையும், தகரப்பேணிகளையும் கூட்டித்துப்பரவு செய்துள்ளார்.

பாராட்டப்பட வேண்டிய செயல்
கண்டும், காணாமலும் செல்லும் சுயநலம் கொண்டவர்கள் மத்தியில் குமுழமுனை பாடசாலை மாணவன் சுதந்திரதினம் ஆகிய இன்று வீதியை துப்பரவு செய்து விபத்தில் இருந்து மக்களை, விலங்குகளை காப்பாற்றியது மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்றாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan