கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி அதிரடிக் கைது
சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் எடையுடன் கூடிய 8 தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்த விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த சந்தேக நபரை இன்று மதியம் கைது செய்துள்ளனர். களனி பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து வந்த இந்திய பிரஜை தங்கத்தை பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கியிருக்கலாம்

துபாயில் இருந்து இன்று காலை வந்த இந்திய பிரஜை ஒருவர் இந்த தங்க பிஸ்கட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ட்ரான்ஸ்சிட் பயணிகள் முனையத்தல் வைத்து, இந்த பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கி இருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தங்க பிஸ்கட்டுக்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தனது காற்சட்டை பைகளில் மறைத்து விமான நிலையத்தின் சுங்க விசாரணைப் பிரிவினை கடந்து செயல்ல முயற்சித்த போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri