வாகன இறக்குமதியில் எழுந்துள்ள சிக்கல் - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
வாகன இறக்குமதிக்காகக் கடன் கடிதங்களைத் (LC) திறக்கும்போது வாகனத்தின் சேசிஸ் எண்ணை (Chassis Number) கட்டாயமாக்க வேண்டும் என்று ஜப்பானிய பயன்படுத்தப்பட்ட வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜகத் ராமநாயக்க முன்மொழிந்துள்ளார்.
வாகன இறக்குமதி செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சர்ச்சைகளைத் தவிர்க்கவும், வாகன இறக்குமதிக்காகக் கடன் கடிதங்களைத் (LC) திறக்கும்போது வாகனத்தின் சேசிஸ் எண்ணைக் கட்டாயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி விதிமுறைகள்
சமீபத்தில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி விதிமுறைகள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கலான சூழ்நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே சில தரப்பினர் இது குறித்த தகவல்களை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, சில குழுக்கள் அந்த தகவலை பயன்படுத்தி கடன் கடிதங்களை திறந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாகன இறக்குமதி
ஒவ்வொரு கடன் கடிதத்தையும் அதன் சேசிஸ் எண் மூலம் ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் இணைப்பதன் மூலம், தற்போதுள்ள சட்ட சிக்கல்களை அகற்ற முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை இறக்குமதி செயல்பாட்டில் அதிகப்பொறுப்புடைமையை உறுதிசெய்யும் என்பதுடன், முறையற்ற வகையில் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்பு மூடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வாகனம் வாங்கும்போது அல்லது கடன் கடிதம் பெறும்போது வாகனத்தின் சேசிஸ் எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஜகத் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்