மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை! தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு தொடரும் அதிர்ச்சி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 5,159 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, வெள்ளியின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 88.15 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகின்றது.
இலங்கை நிலவரம்
அந்தவகையில், இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (10) 7,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,875 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,975 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan