தங்கத்தின் கையிருப்பு பெறுமதியில் வீழ்ச்சி! - மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
இலங்கையில் தங்கத்தின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175. 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382.2 மில்லியன் டொலராக ஆக காணப்பட்டது. இதன்படி, 206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தகவல்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 1,588.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி....
தங்க கையிருப்பினையும் விற்றது மத்திய வங்கி? நெருக்கடியான நிலையில் இலங்கை
போர் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை! - சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri