பொருளாதாரக் குழப்பத்தில் உச்சம் தொடும் தங்க விலை: காரணம் என்ன..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்ற விரும்புவதால், இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் போருக்கு மத்தியில், ஸ்திரத்தன்மை வாய்ந்த முதலீட்டை விரும்புவோருக்கு தங்கம் ஒரு பிரதான தேர்வாக மாறியுள்ளது.
இலாபம் உழைக்கும் ஒரே வழி
பல ஆண்டுகளாக தங்கம் உயர்ந்து வரும் நிலையில், உங்க சந்தையின் சமீபத்திய போட்டி நிலைமை அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தியுள்ளது.
உலக சந்தையின் இந்த நிச்சயமற்ற நிலை நீடித்தால் அடுத்த 18 மாதங்களில் பவுன் ஒன்றுக்கு 987 அமெரிக்க டொலர்கள் வரை தங்கத்தின் விலை செல்லலாம் என கூறப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடிகளின் போது தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்ற போதிலும் அது சிலவேளைகளில் நிலையற்றதாகவும் இருக்கலாம்.
பங்குகள் அல்லது பத்திரங்களைப் போல தங்கம், பங்குலாபம் அல்லது வட்டியை உருவாக்காது. தங்கம் வாங்கும் போது இருந்ததை விட விலை அதிகமாகும் போது அதனை விற்பதன் மூலம் மட்டுமே முதலீட்டாளர்கள் இலாபம் உழைக்க முடியும்.
நிச்சயமற்ற சந்தைகளில் திடீரென தங்கத்தின் விலை வாங்கும் போது இருந்ததை விட குறைவடைந்தால் அது ஒரு நட்ட அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய முதலீடாக மாறும்.
நிச்சயமற்ற சந்தை
இதேவேளை, தொட்டுணரக்கூடிய உண்மையான தங்கத்தை வாங்கும் போது அது பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, சில முதலீட்டாளர்கள் பத்திரங்களின் மூலம் தங்கத்தை கொள்வனவு செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் உண்மையான உலோகத்தை கையாள வேண்டிய தேவை இல்லை.
எனினும், தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் அதில் முதலிட வேண்டாம் என நிதி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
சந்தை நிலவரங்கள் நிச்சயமற்றதாக இருப்பதால் தங்கத்தின் விலை திடீரென குறைவடைவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது சிலவேளைகளில் உங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அளிக்கலாம்.
தங்கம் அல்லது பங்கு என எந்த சொத்தாக இருந்தாலும் அதனை முழுமையாக நம்பி முதலீடு செய்வது ஆபத்தானது.
பல்வேறு சொத்துக்களை உள்ளடக்கிய சமநிலையான முதலீட்டு மூலோபாயம் பொருளாதார நிச்சயமற்ற தன்மையிலிருந்து உங்களின் முதலீட்டை பாதுக்காக்க உதவும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
