உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்க விலை : இந்தியாவில் சரிவடைந்த தங்க விற்பனை
தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், இந்திய மக்கள் தங்க நகைகளை வாங்குவது குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் பழைய தங்க நகைகளை புதிய தங்க நகைகளாக மாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.
பழைய தங்க நகைகளை மாற்றி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய வரிகளால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு மத்தியில், உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அவுன்ஸ் ஒன்றின் விலை 3,245 அமெரிக்க டொலர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை உயர்வால் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு இலட்சம் இந்திய ரூபாயாக பதிவாகியுள்ளது
இதன் காரணமாக இந்திய மக்கள் பழைய தங்க நகைகளை மாற்றி புதிய தங்க நகைகளை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கணிசமான அளவு பற்றாக்குறை
இதனிடையே, இந்திய மக்களின் பழைய தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கப் பொருட்களின் மறுவிற்பனை கணிசமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்க ஆபரணங்களை உருக்கி உடனடியாக விற்பனை செய்யக்கூடிய தங்கக் கட்டிகளாக மாற்றும் பணியில் கடை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் கணிசமான அளவு பற்றாக்குறையாக இருப்பதாக தங்கம் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உலகிலேயே தங்க நகைகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

உக்ரைன் யுத்தத்திற்கு உயர் தொழில்நுட்பம் அனுப்பியவர்கள் மீது பிரித்தானியா பொருளாதார தடை News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
